வடமாகாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கான ரயில் சேவைகள் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது..!

வவுனியா – அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால்  இவ்வாறு 5 மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »