யாழ்ப்பாணம் பேருந்து நிவலயத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட... Read more »

நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு!

யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (30) நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. அத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆலய... Read more »

4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளை…!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபாய் காசு, ஒரு மோட்டார் சைக்கிள்... Read more »

சண்டிலிப்பாயில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது!

மானிப்பாய் – சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் நேற்றையதினம்... Read more »

கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இருவர் கைது!

சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து அவர்கள் கைது ய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும்... Read more »

யாழில் வீடு புகுந்து காடையர்கள் தாக்குதல், சொத்துக்களும் நாசம்…!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று  அதிகாலை தாக்குதல்... Read more »

யாழில் ஆணொருவர் மர்ம மரணம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி... Read more »

15 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்ற இளைஞனும் சிறுமியும் கைது!

திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்து வந்த கள்ளப்பாட்டு இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியைக் காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவ மடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .... Read more »

புத்தூர் மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 25 பெண்கள் உட்பட 31 பேர் கைது!! |

யாழ்.புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் நேற்று 29/06/2023  கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ்ப்பாணம் – புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள்... Read more »

யாழில் மயக்க மருந்து தெளித்து திருடர்கள் கைவரிசை…!

யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து... Read more »