2 இலட்சம் மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் நேற்று புதன்கிழமை 19/06/2024 கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கசிப்பு... Read more »

ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் நேற்று முன்தினம் 13/06/2024  அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு... Read more »

சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களின் 117 வது ஆண்டு நினைவு விழா…!

சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களது 117 வது நினைவு விழா நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் மேலைப்புலோலியிலுள்ள சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாலயத்தில் அமைக்கப்பட்ட சதாவதானி அரங்கில் சதாவதானி கதிரவேற்பிள்ளை சன சமூக நிலைய தலைவர் அ.ஜெயநிமலன் தலமையில்  சிறிலசிறி சோமசுந்தர ஞான தேசிகர் முன்னிலையில் இடம்... Read more »

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும்  ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.... Read more »

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது…!

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அவர்களின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் இன்று அதிகாலை யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்  . யாழ்ப்பாண... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் ஆதரவு, ஆனால் நிபந்தனைகளும் முன்வைப்பு…!

தமிழ் பொது வேட்பாளருக்கு சில நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பேரம் பேசும் அரசியல் வேண்டாம், திட சித்தத்துடன் முன்நகர்வோம் என அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகளும் முன்வேக்கப்பட்டுள்ளன. அதன் முழு... Read more »

யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் ஆதரவு..!

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை 27.05.2024 மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக... Read more »

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

யாழ்ப்பாணம் நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்... Read more »

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைத்து, வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி – ஆலம் பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும்... Read more »