சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் கைதானவருக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 3கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை... Read more »

விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

தரக்குறைவான ஊசியாலும் சரியான சிகிச்சை இன்மையாலுமே சுபீனா உயிரிழப்பு – சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு…!

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.   யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை... Read more »

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக ஒரு குடும்பம் பாதிப்பு – வீடும் சேதம்!

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக நேற்றையதினம் (10) ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை ஜே/415 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடும்பம்... Read more »

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் கைது – திருட்டு பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது  தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A... Read more »

செல்வபுரம் உதயசூரியன் முன்பள்ளியில் நடைபெற்ற உணவு மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி….! 

உதயசூரியன் முன்பள்ளி மற்றும் உதயசூரியன் தாய்மார்கழகம் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச பொது வைத்திய அதிகாரி வைத்தியர் சிவசங்கரி அவர்களும், உரும்பிராய் சமூக மேம்பாட்டு ஒன்றிய தலைவர் வைத்தியர் கணேசவேல் அவர்களும், கோப்பாய் கோட்ட முன்பள்ளி இணைப்பாளரும், உரும்பிராய் முன்பள்ளி கொத்தணி... Read more »

யா.அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா….!

யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. முதல்  நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து அழைத்துவரப்பட்டு மக்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.  வரவேற்பு நடனம்,... Read more »

வாங்காதே வாங்காதே சாராயம் வாங்காதே – அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “காவல்துறையா காவாலி துறையா, சுடலையில் வைத்து தாக்காதே, அலெக்ஸ் ஒரு அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, அலெக்ஸிற்கு... Read more »

போதனா வைத்திய சாலையில் கடந்த  சில நாட்களாக தொலைபேசி திருட்டில்  ஈடுபட்டு வந்த நபர் கைது!

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான அணியினரால் கைது... Read more »

சாதனை நாயகிக்கு யாழ்ப்பாணத்தில் மதிப்பளிப்பு!

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்று யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரப்பத்தில், சாதனை பெண் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க... Read more »