ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல்….!(video)

20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஒன்று (15.10.2023 ) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது ஹர்தால் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களை சந்திப்பது, இந்தியப் பிரதமருக்கான கடிதம்... Read more »

தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணை கிடைத்து 46 ஆண்டுகள் தெரியாதா? வீரசேகரவுக்கு – சபா குகதாஸ்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அமெரிக்கா விசா கிடைக்காத நிலையில் நீதிபதி சரவணராஜா விவகாரத்திலும் ஆட்டம் கண்டு புலம்பியவர் தற்போது புதுக் கயிறு விடுவது போல தமிழர்கள் ஆயுதபலத்தால் கிடைக்காத தமிழீழத்தை பதின்மூன்றாம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என முட்டாள் தனமாக... Read more »

சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக்குகள் அனைத்தும் இடமாற்றம்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை (16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு... Read more »

குப்பை கொழுத்திய போது ஆடையில் பற்றிய தீயினால் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு….!

வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

யாழில் இருந்து கொழும்பு சென்ற புகைரதத்தில் போதை ஆசாமி அடாவடி! தப்பி ஓடியபோது நடந்த தரமான சம்பவம்…!

யாழ்ப்பாணம் – கொழும்பு ரயிலில் மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர். அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி புகையிரதத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.... Read more »

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு!

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத் தலவைர்... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக மரக்கன்றுகள் நாட்டல்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக நேற்றையதினம் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. கடந்த ஆனி மாதம் யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில், நேருக்கு நேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த... Read more »

சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும்…..!  ஐ.நாவில் கஜேந்திரகுமார் 

சரியான   சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »

தியாகதீபம் திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நேற்று (16.09.2023) சனிக்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப்... Read more »

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு….!

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தொழிவழிகாட்டல் உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின்... Read more »