இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று நினைவுபடுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்கால்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு நேற்றையதினம்... Read more »
யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்... Read more »
சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »
பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும், (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கும் இடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் (IDCTE) ஒழுங்கமைப்பில், பின்லாந்து தேசத்தின், மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் தீனா... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு முன்பாக இனவாதிகள் சிலர் இன்றையதினம் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இனவெறிக்கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பிக்குவுடன் வந்த சிலரே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி,... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர்.... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் சற்று முன்னர் வழியாக இருக்கின்றன Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த சில... Read more »