ஓய்வுபெற்ற படைவீரர்கள் தொடர்பில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டம்..!

ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பங்குபற்றும் நிகழ்வொன்று... Read more »

பண்டிகைக் காலங்களில் இனிப்பு பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து, காலாவதியான இனிப்புகளை  இறக்குமதி செய்து திகதிகளை மாற்றி விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் ஆவணங்கள் பரிசோதனை செய்த... Read more »

வவுனியா ஓமந்தையில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து – ஒருவர் பலி..!!

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06) காலை 10.30மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியாயூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகேய்தகுளம் பகுதியில் புகையிரத கடவையினை... Read more »

காசாவிற்கான உதவிகளை அதிகரிக்க ராயல் நேவி கப்பலை அனுப்பும் பிரித்தானியா..!!

புதிய மனிதாபிமான கடல் வழித்தடத்தை அமைப்பதற்கு உதவும் சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ராயல் நேவி கப்பல் ஒன்று காசாவிற்கு உதவி வழங்கும் என்று வெளியுறவு அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சைப்ரஸ் மற்றும் இதர பங்காளிகளை உள்ளடக்கிய பன்னாட்டு... Read more »

வடக்கு உட்பட குறிப்பிட்ட பகுதிகளில் இன்றைய வெப்பநிலை மிகவு‌ம் ஆபத்தான நிலையில் ‼️

🔴வடக்கு உட்பட குறிப்பிட்ட பகுதிகளில் இன்றைய வெப்பநிலை மிகவு‌ம் ஆபத்தான நிலையில் ‼️ வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பிரதேசங்களிலும் இன்று வெப்பநிலை அபாயகரமான மட்டத்திற்கு அதிகரிக்கும் என... Read more »

அரச ஊழியர்களுக்கு வெளியான நற்செய்தி..!

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு பாதீட்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு பணியாளருக்கும் கூடுதலாக 10,000 ரூபாய்... Read more »

ஆறு நாட்களுக்கு மூடப்படும் மதுபானசாலைகள்..!

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பக் பௌர்ணமி தினமான ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.... Read more »

கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு..!

கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,... Read more »

தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர உரிமம்..!

தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர சாரதி உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 03 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் நிறைவடையும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். நாளாந்தம்... Read more »