மக்களின் பேரெழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும், தியாகங்கள் என்றும் வீண் போகாது – வேலன் சுவாமிகள்

மக்களின் பேரெழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும் எனவும் தியாகங்கள் எப்பொழுதும் வீண் போகாது எனவும் வேலன்  சுவாமிகள் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(15) நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்... Read more »

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

மின் கட்டண குறைப்பு சதவீதம் – கால அவகாசத்தை கோரும் மின்சார சபை!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த... Read more »

கோர விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்..!

களுத்துறை – பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை நிவ்டாவ சந்தியில் வசித்து வந்த அவித்யா ரசிது பெர்னாண்டோ என்ற... Read more »

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் வெசாக் வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில்  மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெசாக்... Read more »

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு…!

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில், கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.... Read more »

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.... Read more »

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்…! யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது., வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் 3... Read more »

யார் என்ன சொன்னாலும் இஸ்ரேல் நாட்டுக்கு வேலையாட்களை அனுப்புவதை நிறுத்த மாட்டோம்!

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சில அரசியல் குழுக்கள், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இலங்கை... Read more »

இன்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை..!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல்,... Read more »