
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று ஆலயத்திற்குச் சென்றவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(14) வியாழக்கிழமை... Read more »

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கடந்த 13.04.2024 புதன் கிழமை மருதங்கேணி கடற்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக குலைகளை கடலில் போட்டு கணவாய் பிடிப்பதற்காக கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு... Read more »

சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹொங், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே... Read more »

தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பிடித்துள்ள இருவரும் தமிழ் பேசும் பெண்கள் என்பது விசேட அம்சமாகும். தொழில்முனைவோர், ஊடக நிர்வாகிகள்,... Read more »

இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும், செயல்முறையும் இன்று பரந்தன், பன்னங்கண்டி பகுதிகளில் நடைபெற்றது. கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சியில் விவசாயிகள் கமநலசேவை திணைக்களத்தினர், விவசாய போதனாசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் இதன்... Read more »

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் காரைநகர் – ஊரி பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர், சட்டத்தரணி திருமதி.அம்பிகா அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த... Read more »

ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஒன்று இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கில், கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் இந்த சொற்பொழிவு இடம்பெற்றது. இந்திய துணைத் தூதரகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சுடன்... Read more »

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி... Read more »

இலங்கை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் டிசம்பர் மாதம் தொடக்கம் பொலிஸ் திணைக்களத்தினால் யுக்திய செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறித்த யுக்திய செயற்றிட்டமானது இன்று(14.03.2024) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தூரப்பிரதேசங்களில் இருந்து கொழும்பிற்கு வருகை தரும் பேருந்துகள்... Read more »

நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விசமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு முதல் ஐந்தாம் தரங்களுக்கு இடைப்பட்ட வகுப்புகளில் கற்கும்... Read more »