
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து மோப்ப நாய்கள் சகிதம் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின்... Read more »

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற வரலாறு உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்... Read more »

ஹம்பாந்தோட்டை கொன்னொறுவ சோலார் எனர்ஜி பூங்காவில் 150 மெகாவாட் நிலத்தடி சோலார் பேனல் ஆற்றல் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான மின்சாரம் கொள்வனவு ஒப்பந்தம் நேற்று(13) மாலை கைச்சாத்திடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த திட்டம் 17 உள்ளூர் அபிவிருத்தியாளர் மற்றும்... Read more »

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நால்வருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் இன்று (14) மறுத்துள்ளது. மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமே பிணைக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது. இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி... Read more »

ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடக மாணவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இவ் ஆண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு வழங்கப்படுகிறது ——————————— யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும்,... Read more »

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது... Read more »

போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார். கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர்... Read more »

பாடசாலைகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவும் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதன் முன்னோடித் திட்டம் 17 பாடசாலைகளை உள்ளடக்கி... Read more »

வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் இராணுவத்தினரால் சிறு கோயில் போன்ற அமைப்புக்குள் பிள்ளையார், சிவலிங்கம் மற்றும் இலட்சுமியின் உருவப்படமும் வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது. இந் நிலையில், காணி... Read more »

தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பார்சலுக்கான கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை தபால் மூலம் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியாக கிரெடிட் கார்டு தகவல்களை திருடுவதற்காக பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது. இதுபோன்ற குறுந்தகவல்களுக்கு தங்களது ரகசிய தகவல்களை... Read more »