
மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொணராகல, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »

யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் இராணுவ வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றது. இந் நிலையில் படுகாயமடைந்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர் 60 வயதான சிதம்பரப்பிள்ளை வசந்தாதேவி... Read more »

சாவகச்சேரி பகுதியில் இன்று(11) மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். தென்மராட்சி சாவகச்சேரி தபால் கந்தோர் வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்... Read more »

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்... Read more »

யாழ்ப்பாணத்தில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான... Read more »

காலி மகும்புர தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) முதல் கால அட்டவணைக்கு அமைய மாத்திரம் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என காலி மகும்புர தெற்கு... Read more »

நாட்டில் சுமார் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்... Read more »

நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கலந்துரையாடலில் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்கள் கருத்துகளை... Read more »

இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் சிக்கியுள்ளது. தொண்டி கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா மூட்டைகளை திருச்சி மத்திய நுண்ணறிவு... Read more »

40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த அடையாளம் தெரியாத இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞன் நேற்று (10) காலையில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தலைநகர் டெல்லியில் உள்ள... Read more »