வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய பொலிஸ் அராஜககம்; நாளை வெடிக்கவுள்ள போராட்டம்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து நாளை  மாலை 4 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 ஊழியர்கள்... Read more »

பச்சிலைப்பள்ளியில் எரிபொருள் நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப் பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையதின் திறப்பு விழாவில் இன்று 09.03.2024 பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக எரிபொருள் நிலையத்தின் பெயர் பலகை மற்றும் நாடா வெட்டி திறந்து வைத்தார். மேற்படி... Read more »

இந்திய துணை தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ் வடமராட்சிக்கு விஜயம்…!

இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையிலான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகாரிகள் இன்றையதினம்(09)  காலை யாழ் வடமராட்சி பகுதிக்கு விஜயம் மொன்றை மேற்கொண்டனர். இதன்போது நெல்லியடியில் இடம்பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட குறித்த  குறித்த குழுவினர் அங்கிருந்த... Read more »

குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள்…!

பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று(9) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. மேலும் , ஒரு கிலோ... Read more »

யாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் நாளை விடுவிப்பு…!

யாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் நாளை(10)  விடுவிக்கப்படவுள்ளதாக  யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் தற்போது படையினர் வசமுள்ள 3 ஆயிரத்து 412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படுகின்றது. இதற்கான நிகழ்வு நாளை(10)  யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும்... Read more »

வடக்கு மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன்…!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் எதிர்வரும் 15ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார். நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றிய அவர், பின்னர் கொழும்புக்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.... Read more »

கோர விபத்து மூவர் பலி அதிகாலை துயரம்

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதாவது கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மூன்று... Read more »

முருகனுக்கு கடவுச் சீட்டு வேண்டும்…! நீதிமன்றை நாடிய நளினி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நளினி தனது கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரித்தானியா சென்று அங்கு தனது மகளுடன் வாழ கடவுச்சீட்டு... Read more »

நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! -அலி சப்ரி

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்  என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி   தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும்... Read more »