மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் தகுதியான அதிபர் பக்கமே நான்.. அமைச்சர் டக்ளஸ் கருத்து….!!!

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற நீதியில் கல்லூரியின் தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என கடற்தொழில் அமைச்சரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு சபையின் புலமைப்... Read more »

கல்வி அமைச்சால் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

பாடசாலை மாணவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2024) வரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபட கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது. அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையின் போது மாணவர்கள் வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும்... Read more »

சாந்தன் அவர்களது மரணத்திற்கு அங்கஜன் எம்.பி இரங்கல்

சாந்தன் அவர்களது மரணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விரைவில் தனது தாயாரை சந்திப்பார் என நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த சாந்தன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளதாக தமிழக செய்திகள் தெரியப்படுத்தியுள்ளன. கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு... Read more »

நெடுந்தூர பேருந்து சேவைகள் ஊழியர்கள் போராட்டம் – நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட அங்கஜன்

யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று ( 28.02.2024 ) முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள்  காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ... Read more »

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதி 

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (28.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024 புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு தேசிய... Read more »

சுமந்திரனின் தாயாருக்கு மகிந்த அஞ்சலி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் நேற்று காலமான நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலி செலுத்தினார். கொழும்பு – தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் சுமந்திரனின்... Read more »

தமிழரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டது

தமிழரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2017ம் ஆம் ஆண்டு ஈழமக்கள் புரட்சிகர... Read more »

யாழில் நிறைவெறியில் இனத்துவேச கருத்துக்களுடன் தமிழ்ப் பொலிசாரை ஏசிய 2 சிங்களப் பொலிஸாருக்கு விளக்கமறியல்!!

இனத்துவச கருத்துக்களை தெரிவித்து, சக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் நேற்று முன்தினம் ஞாயிறுக்கிழமை இரவு நிறை வெறியில் உள்நுழைந்து சக பொலிஸாருடன் முரண்பட்டு , தமிழ் பொலிஸ்... Read more »

ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு

ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு யாழ்ப்பாண கந்தர்மட பழம் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தில்,  ஊடக... Read more »