இணையப் பாதுகாப்புச் சட்டம் நாட்டிற்கு அவசியம்..!

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவான விளக்கத்தினை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி... Read more »

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் சேவை நீடிப்பு

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்குவதற்காக  அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். தேசபந்து தென்னகோன் கடந்த வருடம்  நவம்பர் 29 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு 3 மாத காலத்துக்கு... Read more »

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கணினி ஹெக்கர்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக்  கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்க  பல்வேறு பாதுகாப்பு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால்... Read more »

இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது! கடற்படைத் தளபதி

இந்திய கடற்றொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். இதேவேளை நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர்... Read more »

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

பெப்ரவரி மாதத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது. இதேவேளை, ஜனவரி மாதம் வரை 60க்கும் மேற்பட்ட டெங்கு... Read more »

கட்டைக்காட்டில் இலவச கண் சிகிச்சை நிகழ்வு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய வின்சன்டி போல் சபையினர் ஒழுங்குபடுத்திய இலவச கண்பரிசோதனை முகாம் இன்று 24.02.2024 கட்டைக்காட்டில் நடைபெற்றது கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் மரியாள் மண்டபத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்வில்யாழ் R.i.s கண்பரிசோதனை மையத்தின் வைத்தியர் Dr.ரகு... Read more »

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்கு விஜயம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வங்கி ஊழியர்களுக்கான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோதே கிளிநொச்சி அறிவியல் நகரில்... Read more »

இலங்கைக்கு செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி... Read more »

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி! 

மறைந்த புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம்  நல்லநாதர் அவர்களின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும்,... Read more »

தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை…! 615 சந்தேக நபர்கள் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 615 சந்தேக... Read more »