திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது. சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »
குவைத் நாட்டில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனையைச் சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுடப்பட்டுள்ளார். சுமார் 8 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்து வரும் இவர் இறுதியாக கடந்த 2022 ஆம்... Read more »
அதாவது சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். பனி படர்ந்த அந்த... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ரிச்சர்ட் வர்மாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... Read more »
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 7 ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (23 ) வெள்ளிக்கிழமை ஆலய நிர்வாகத்தினர், பூசகர்களின் ஏற்பாட்டில் ஆலயத்துக்கு செல்லவுள்ளவர்களின் பெயர்கள் திரட்டி அதனை பிரதேச செயலகத்துக்கு வழங்கி... Read more »
வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புத் தரப்பினரின் இடையூறுகள், அச்சுறுத்தல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம், பலாலி, வசாவிளான் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மூன்று ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில்22.02.2024 வியாழக்கிழமை கரையொதுங்கிய இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை JCB,உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றினர். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது இதனை அவதானித்த கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்தனர். கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும்... Read more »
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள் 1994-1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின்போது இறந்தவர்களுடையதாக இருக்கலாமென நீதிமன்றில்... Read more »
இலங்கையில் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட “இமாலய பிரகடனத்திற்கு” தாம் நிதியுதவி செய்ததாக சுவிட்ஸர்லாந்து அரசாங்கமம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து சோஷலிஸ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொலினா ஃபேபியன் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த புதன்கிழமை (பெப்ரவரி 21) பதிலளிக்கும் போதே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு இதை... Read more »