பொது கொள்முதலில் ஊழல் செய்யும் ஒப்பந்ததாரர்களின் கறுப்புப் பட்டியலில் இடம் பெறாத தெற்காசியாவில் உள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே என ஆய்வில் தெரியவந்துள்ளது. Verite Research இன் புதிய அறிக்கையின்படி, கொள்முதல் செயல்பாட்டில் உள்ள ஊழல் மற்றும் மோசடி நடைமுறைகள் தடுப்புப்பட்டியலில் ஒரு... Read more »
நாட்டில் ஆசிரியர்களை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும். இது தொடர்பில் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர்... Read more »
லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இலங்கையின் பல்வேறு ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியில் புனித லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இன்று17.02.2024 முன்னெடுக்கப்பட்டது. செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின்... Read more »
இலங்கை யின் மேல் மாகாணத்தின் மீகொட பிரதேசத்தில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறுமி மூன்று பேரால் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு... Read more »
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும்,நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட... Read more »
தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிக்கும் தென்னிலங்கை, அரசியல்வாதிகள் பொறுப்பற்ற பேச்சுக்களால் மீண்டும் இனங்களுக்கிடையே விரிசலும் நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்ல வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட... Read more »
வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள்... Read more »
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள் ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் சந்தித்தார். இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி... Read more »
யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும், அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்களில்... Read more »
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் நிலைய... Read more »