வடக்கு மாகாணத்தில் கடல்தொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தலைமை உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் 80 மில்லியன் நிதி கிடைத்துள்ளது. அதில் பெரும்பகுதி நிதி கரைச்சி... Read more »
வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று பிடிக்கப்பட்டது. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகளுக்கே எலிக்காய்ச்சல் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அவதானமாக செயற்படவேண்டும். காய்ச்சல், தசைகளில் கடமையான வலி, கண் விழி சிவப்பு நிறம் அடைதல்,... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு... Read more »
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கௌரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »
இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. பொதுச் செயலாளர்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள், இடம்பெற்று எம்பெருமான் எழுந்தருளியாக உள்வீதி, வெளிவீதியூடாக திருமஞ்சத்தில் வீற்று பக்தர்கள் அருள்பாலித்தார்.... Read more »
தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுத்கும் சம்பரதாய நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சங்குவேலி வயலில் விளைந்திருந்த நெற்கதிகதிர்களை அப்பிரதேச விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று சூரியனுக்கு வணக்கம் தெரிவித்து நெல்லினை அறுவடை செய்தனர். அவற்றினை தலையில்... Read more »
நாட்டில் பாவனைக்குட்பட்ட வாகனங்களுக்கும் VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, முறையான நிறுவனங்கள் பயன்படுத்திய வாகனங்களை விற்பனை... Read more »
பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க... Read more »