
கிளிநொச்சி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் பாலசுந்திரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார். காணிக்கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் ... Read more »

கிளிநொச்சியில் கொரோனாப் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி சேவைச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பொருத்தமான பொது இடங்களில் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது. வியாபாரிகளும்... Read more »

(சி.அ.யோதிலிங்கம்) இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு தமிழ் நாட்டுச் செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இம் மாநாட்டுக்கு காசிஆனந்தன் தலைமை தாங்கியிருந்தார். சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் இராமு மணிவண்ணன் இணைப்பாளராகக் கடமையாற்றினார். இலங்கையைச்... Read more »

(சி.அ.யோதிலிங்கம்) தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த 1ம் திகதி இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு இடம் பெற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இம் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக்கழக அரசறிவியல் துறைப்பேராசிரியர் இராமு... Read more »

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அவரே தனது ருவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, எனக்கும், மனைவி மற்றும் மகளுக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்த நிலையில் பரிசோதனைக்கு... Read more »

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் முதியவர் ஒருவர் சடலமாக காணப்படுவதாக பருத்தித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த முதியவர் கோப்பாய்... Read more »

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விமான அம்பியூலன்ஸ் மூலம் இலங்கையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் இரகசியமாக சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனிலிருந்து மஸ்கட் வழியாக... Read more »

யாழ்.காங்கேசன்துறை வீதியில் சிவலிங்கபுளியடி பகுதியில் மோட்டார் சைக்கிளை மறித்து உதவி கேட்டவருக்கு உதவி செய்ய சென்றவருடைய. சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் சங்கிலியை அறுத்துச் சென்றவர் யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சங்கிலியும் மீட்கப்பட்டிருக்கின்றது.... Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 111 பேர் உட்பட வடமாகாணத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் 523 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 111 பேருக்கு... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தகவல்கள் தொிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைத்திய அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து வைத்திய அதிகாரி கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போதைய ஊர்காவற்றுறை வைத்தியசாலை பொறுப்பதிகாரி ஊர்காவற்றுறை பிரதேச... Read more »